வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை: அன்புமணி ராமதாஸ்

வந்தவாசியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர்,
தருமபுரி இளவரசன் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்துகின்றனர். ஆனால் மரக்காணத்தில் வன்னியர் இருவர் இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் மீது வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நாங்கள் வழக்கு போடுவோம். அப்போது அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை. பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக