ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

தமிழக வருமான வரி : அ.தி.மு.க முதலிடம்! வருமான வரி கணக்கு மூலம் தகவல் வெளியீடு

இந்த கணக்கை பார்த்தாலே புத்தியுள்ளவர்களுக்கு உண்மை புரிஞ்சு போயிரும். உண்டியல் வச்சு துண்டேந்தி நிதி திரட்டும் திமுகவை விட அதிமுகவுக்கு இடண்டு மடங்கு அதிக வருமானமாம். பெரும் தேசிய கட்சிகளில் ஒன்றான பாஜகவின் வருமானத்தில் சுமார் 63% வருமானத்தை ஒரு மாநில கட்சி நாலாம் பேருக்கு தெரியாமல் ஈட்டுவதேன்றால் நேர்மையாக அது சாத்தியமா.....? அதிலும் 56 சதவீதத்தை விண்ணப்பங்கள் விற்பனை மற்றும் வேட்பு மனு நிதியாக மட்டும் பெறுகிறார்களாம். இந்த கட்சியில் மட்டும் இந்த அளவு பணம் கொடுத்து சீட்டுப்பெற முயற்சிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் தானே காரணம். இத்தனைக்கும் கடந்த 3 பாராளுமன்ற தேர்தல்களில் திமுகவின் வெற்றி விகிதம் அதிமுகை விட மிக அதிகம். சட்டமன்ற வெற்றியும் மாறி மாறித்தான் வருகிறது. திமுகவை ஊழல் கட்சியாக உருவகப் படுத்துபவர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது இதிலிருந்து விளங்கும்.  </ சென்னை:அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானத்தில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகியன முதல் இரு இடங்களை வகிக்கின்றன. மாநில கட்சிகளில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் முதல் இரு இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளன.
இத்தகவல்களை, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறைக்கு, அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த கணக்குகளிலிருந்து, ஜனநாயக சீரமைப்பு சங்கம் பெற்று, வெளியிட்டுள்ளது.

இச்சங்கத்தின் நிர்வாகியான, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் இதுகுறித்து கூறியதாவது:வருமான வரித்துறைக்கு, 2004 - 05ம் ஆண்டு முதல், 2011 - 12ம் ஆண்டு வரையிலான நிதியாண்டில், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த கணக்குகளை, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம்.



காங்கிரஸ் முதலிடம்:

காங்கிரஸ், பா.ஜ., - அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கணக்குகளை பெற்றுள்ளோம். இதில், காங்கிரஸ், பா.ஜ., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., ஆகியன தேசிய கட்சிகள் பட்டியலிலும், மற்ற கட்சிகள் மாநில கட்சிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. பா.ம.க., - ம.தி.மு.க., விரவங்கள் கிடைக்கவில்லை.வருமான வரித் துறையிடம், கட்சிகள் தாக்கல் செய்த கணக்குகளின் படி, தேசிய கட்சிகள் வரிசையில், காங்கிரஸ், 2 ஆயிரத்து 365 கோடி ரூபாய் வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. 1,304 கோடி ரூபாய் வருவாயுடன், பா.ஜ., இரண்டாவது இடத்தில் உள்ளது. 521 கோடி ரூபாய் வருமானத்தை பெற்று மார்க்சிஸ்ட் மூன்றாவது இடத்தையும், 10 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் நான்காவது இடத்திலும் உள்ளன.தமிழக கட்சிகள் வரிசையில், 819 கோடி ரூபாய் வருமானத்தில், அ.தி.மு.க., முதலிடத்திலும். 442 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்று, தி.மு.க., இரண்டாவது இடத்தில் உள்ளன. தே.மு.தி.க., 196 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றதாக தெரியவந்துள்ளது.

வருமானம் விவரம் :

நன்கொடை, உறுப்பினர்கள் சந்தா வசூல், வங்கி வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி, தேர்தல் "சீட்' கேட்கும்போது, கட்சியினர் அளிக்கும் வேட்பு மனு தொகை ஆகியவற்றிலிருந்து வருமானம் கிடைப்பதாக, பெரும்பாலான அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.காங்கிரசின் மொத்த வருவாயில் 77 சதவீதம், "கூப்பன்' விற்பனையிலிருந்து கிடைத்ததாக தெரிவித்துள்ளது. "கூப்பன்' என்பதற்கு விளக்கம் அளிக்கவில்லை. நன்கொடையாக 13 சதவீதமும், வைப்புத் தொகை வட்டியாக 5.60 சதவீதமும் கிடைப்பதாக தெரிவித்துள்ளது.மொத்த வருமானத்தில் 84 சதவீதம், நன்கொடைகள் மூலம் கிடைப்பதாக, பா.ஜ., கூறியுள்ளது. நன்கொடைகள் மூலம் 44 சதவீதமும், உறுப்பினர்களின் சந்தா மூலம் 38 சதவீதமும் வருவாய் கிடைக்கிறது என, மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய், கட்சி நிதி, கல்வி நிதி, நன்கொடைகள் மூலம் 53 சதவீதமும், வட்டி மூலம் 21 சதவீதமும், உறுப்பினர் கட்டணம் மூலம் 14 சதவீதமும் கிடைப்பதாக, கணக்குகளை தாக்கல் செய்துள்ளது.

அ.தி.மு.க.,:

சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு நிதியாக 36 சதவீதமும், விண்ணப்பங்கள் விற்பனை மூலம் 20 சதவீதமும், வட்டி மூலம் 14.5 சதவீதமும் வருவாய் கிடைப்பதாக, அ.தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., தாக்கல் செய்துள்ள கணக்கில், சிறப்பு நிதி உபரி மூலம் 59 சதவீதமும், வங்கி வட்டி மூலம் 15 சதவீதமும், வேட்பு மனு நிதியாக 7 சதவீதமும் வருவாய் கிடைப்பதாக தெரிவித்துள்ளது.தே.மு.தி.க.,வின் வருவாயில் பெரும் பகுதி, எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேட்பு மனுக்கள் மூலம் கிடைப்பதாகக் கூறியுள்ளது. மொத்த வருவாயில், இத்தொகை 65 சதவீதம் என, குறிப்பிட்டுள்ளது.

செலவு :

தேர்தல் செலவு, விளம்பர செலவு, கட்சி நிர்வாகிகளின் போக்குவரத்து செலவு, கட்சியின் சார்பில் அச்சடிக்கப்படும் போஸ்டர், கொடி செலவுகள், பொதுக்கூட்டம் நடத்த ஆகும் செலவு, அலுவலக செலவு, அலுவலக உபகரணங்கள் வாங்கும் செலவு என, அரசியல் கட்சிகள் செலவின கணக்கை காட்டுகின்றன.காங்கிரஸ் வெளியிட்டுள்ள செலவு கணக்கில் 1,168 கோடி ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ., 152 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 517 கோடி ரூபாயும் காட்டியுள்ளன. தி.மு.க.,வின் மொத்த வருவாயில் 22 சதவீதம் செலவினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான, முழு விவரங்கள் இல்லை.தேர்தல் ஆணையத்துக்கு, அரசியல் கட்சிகள் கொடுத்த கணக்கும், வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கும் வித்தியாசப்படுகின்றன. நன்கொடைகள் பற்றிய முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் வரவு, செலவு வெளிப்படையாகத் தெரிய, அவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, தேவசகாயம் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக