வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மும்பையில் பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு 5 பேர்கொண்ட கும்பல் பொது இடத்திலே பட்ட பகலில் !

Associated PressMumbai: In a ghastly incident, a woman photojournalist was allegedly gangraped by five men in Parel area in central Mumbai on Thursday night, police said.
She was accompanied by a male colleague.
மும்பையில் 5 பேர் கொண்ட கும்பலால் பெண் புகைப்பட பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பிரபல பத்திரிகை ஒன்றில் புகைப்படப் பத்திரிகையாளராக பணியாற்றிவரும் பெண் ஒருவர், வேலை நிமித்தமாக தனது நண்பருடன் சக்திமில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் இவர்களை சூழ்ந்துள்ளனர். உடனிருந்த நண்பரை அடித்து துரத்திய அந்த கும்பல், அந்த பெண்ணை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை இளைஞர்களிடம் இருந்து மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், பலாத்கார சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். தற்போது அந்த  பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். காவல்துறை உயரதிகாரிகள் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். சக்தி மில் அருகே வேலை நிமித்தமாக சென்ற பெண் பத்திரிகையாளரை சிலர் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக