சனி, 17 ஆகஸ்ட், 2013

367 இந்திய கைதிகளை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்

இந்திய எல்லையில் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் அணி, கார்கில் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அடுத்த மாதம் ஐ.நா. பொதுசபை கூட்டத்தின்போது, இருநாட்டு பிரதமர்களும் சந்திப்பது, நம்பிக்கையை உருவாக்குவதற்கும் உறவுகளை ஒருங்கிணைக்கவும் பயனுள்ள வாய்ப்பாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், 367 இந்திய கைதிகளை அடுத்த வாரம் விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 24-ம் தேதி 367 இந்திய கைதிகள் மற்றும் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இந்த முடிவு அறிவிக்கப்படவில்லை.

வெளியுறவுத் துறைக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், பாராளுமன்றத்தில் நேற்று பேசியபோது, “பாகிஸ்தான் சிறைகளில் 437 இந்திய மீனவர்களும், 54 இதர கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இந்தியாவில் உள்ள சிறைகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த 172 மீனவர்களும், 313 இதர கைதிகளும் உள்ளதாக வெளியுறவுத்துறை பதிவேட்டில் உள்ளது. ஆனால், தூதரக ஒப்பந்தத்தின் கீழ் ஜூலை 1-ம் தேதி அரசு வழங்கிய பட்டியலில், 386 பாகிஸ்தான் கைதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக