ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தலைவா 20-ம் தேதி ரிலீஸ் ! ஜெ.அன்பழகனின் அதிரடி வேலைசெய்கிறது ? இன்று முன்பதிவு ஆரம்பம் !

தலைவா 20-ம் தேதி ரிலீஸ்... இன்று முதல் முன்பதிவு! சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து, தமிழகத்தில் மட்டும் வெளியாகாமலிருந்த தலைவா படம், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை நடிக!ர் விஜய்யும் சரி, இயக்குநர் விஜய் அல்லது இப்போது நெஞ்சு வலி என மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளரும் சரி சொல்லவே இல்லை. இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, போலீசார் கூறிவிட்டனர். ஆனால் படத்தை வெளியிட வேண்டிய வேந்தர் மூவீஸோ வாயைத் திறக்கவில்லை. ஆனாலம முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர். ஆனால் முதல்வர் இதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. இந்தப் படத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் உணர்த்திவிட்டார். இந்த நிலையில்தான், தலைவா படத்துக்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்னிடம் கொடுங்கள் நான் நாளையே 300 தியேட்டர்களில் வெளியிட்டுக் காட்டுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் திமுக எம்எல்ஏவும், புதிதாக தயாரிப்பாளரானவருமான ஜெ அன்பழகன். இதற்குப் பிறகுதான் படத்தை வெளியிட விஜய்யும் வேந்தர் மூவீஸும் வேலைகளில் இறங்கினர். இப்போது படம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி, செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்றும், ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முன்பதிவு தொடக்கம் என்றும் வேந்தர் மூவீஸ் அறிவித்துள்ளது. ஆனால் படத்தை மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் திரையிட மாட்டோம் என்றும், சதவீத அடிப்படையில் வெளியிடுகிறோம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தே படத்தை வெளியிடுகின்றனர்.
  tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக