கனடா டொரன்டோ நகரில் வெள்ளப்
பெருக்கு வீதிக்கே வந்து விட்டது.
யாருமே எதிர்பாராமல், மிகக் குறுகிய நேரம் அடித்த மழை சூறாவளியால், வீதியெல்லாம் ஆறாக ஓடியது வெள்ளம். ஆறு என்பது உவமானத்துக்கு சொல்லப்பட்டதல்ல, நிஜ ஆறு போலவே வெள்ளம் பாய்ந்து ஓடியது.
கார்களை வெள்ளம் அடித்துச் சென்றது. காரில் பயணம் செய்து
கொண்டிருந்தவர்கள் திடீரென வெள்ளம் காரை மூடிக்கொண்டதில், இறங்கி நீந்திச்
செல்ல வேண்டியதாயிற்று. அல்லது, காரின் மீது ஏறி நின்று, படகுக்காக
காத்திருக்க வேண்டி வந்தது.
அதாவது பரவாயில்லை. ட்ரெயினில் பயணம்
செய்தவர்களின் நிலைமை அதைவிட மோசம். ஒதுக்குப்புறமான ரயில் பாதையில்
ட்ரெயின் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
ட்ரெயின் அசைய முடியவில்லை.
எப்படி அசைய முடியும்? ட்ரெயினுக்கு உள்ளேயே வந்துவிட்டது வெள்ளம். அவ்வளவு
உயரத்துக்கு நீர் மட்டம். 8 மணிநேரம் பயணிகள் காத்திருந்த நிலையில்,
மீட்புப் படகுகள் வந்து பயணிகளை மீட்டுச் சென்றன. நல்லவேளையாக வெள்ளத்தில்
மாட்டிக்கொண்ட ட்ரெயின்கள், டபுள் டெக்கர் (இரண்டு அடுக்கு) கொண்டவை.
3 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் நின்றுபோனது. வீதி சிக்னல்கள் எதுவும்
இயங்கவில்லை. அது பரவாயில்லை, வீதியில் படகுகள் அல்லவா போய்க்கொண்டு
இருந்தன!
இங்கு இப்படியொரு வெள்ளப்பெருக்கு இதுவரை ஏற்பட்டதேயில்லை. அனைவருக்கும் புதிய அனுபவம். ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக