ஞாயிறு, 21 ஜூலை, 2013

Solar Panel மோசடி பணத்தில் நடிகர் மம்முட்டிக்கு ரூ.10 லட்சம் ? அடடா அது விருதாமே ? நம்புறோம் நம்புறோம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மம்முட்டிக்கு ரூ.10 லட்சம் வழங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரளா அரசியலை உலுக்கி வரும் சோலார் பேனல் மோசடி வழக்கில் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது மலையாள சினிமாவின் முக்கிய பிரபலங்களுடனும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ‘டீம் சோலார், சுவீட் சோலார்‘ என்ற பெயரில் நிறுவனங்கள் நடத்தி வந்தனர். இந்நிறுவனங்கள் சார்பில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அடிக்கடி கேரளாவில் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கலைநிகழ்ச்சி நடத்தினர். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, விவசாய துறை அமைச்சர் மோகனன் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது நடிகர் மம்முட்டிக்கு சிறப்பு விருதை வழங்கி சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். இதில் ரூ.25 ஆயிரம் காசோலையாகவும், மீதியை பணமாகவும் கொடுத்துள்ளனர். சோலார் பேனல் மோசடி மூலம் கிடைத்த பணத்தைதான் நடிகர் மம்முட்டிக்கு கொடுத்தாக சரிதா நாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் போலீசிடம் தெரிவித்துள்ளனர். இதேபோல் மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் மம்முட்டி கலந்து கொண்ட புகைப்படங்களும் போலீசுக்கு கிடைத்துள்ளன. இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாலுமேனனுக்கு ஆக.3 வரை சிறை சோலார் பேனல் மோசடி வழக்கில் மலையாள நடிகை சாலுமேனனை கடந்த இரு வாரங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் திருவனந்தபுரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிபதி, ஆக.3ம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக