செவ்வாய், 23 ஜூலை, 2013

லண்டனில் chennai ஜார்ஜினாவின் மரணம் தற்கொலை அல்ல ! There is no fan nor iron rod in the room where she was found dead. How could she have hanged herself?”

Mystery surrounds the death of Georgina Thomson, 18, daughter of J. J. Nagar police station Inspector S. Thomson. Georgina was found dead in a hostel room in Liverpool university, UK, on July 12 in a case of suspected suicide. She was doing her second year in aerospace engineering and had wanted to become an astronaut.The local Merseyside Police are not treating the  incident as suspicious and an inquest to determine the exact  cause of death is due to open at the Liverpool Coroner’s Office on Friday. 
“The coroner is still awaiting results of a few inquiries before the inquest can open tomorrow. We hope to be able to release the body for the funeral soon after,” a spokesperson for the coroner’s office said.
Police inspector Thomson, a widower, is unable to accept the idea of his daughter having committed suicide. “There is no fan nor iron rod in the room where she was found dead. How could she have hanged herself?” he asked, referring to her room on the campus at Edge Hill where she was found.
The local police noted that Georgina had not been in regular contact with her family in Chennai, and in one of her last emails a few months ago, she wrote about being unwell. It is not clear if any family situations in Chennai had forced her to take the extreme step, police sources here said.
Georgina was inspector Thomson’s eldest child. Her physically challenged brother is studying in a school in Chennai.
லண்டன்: விண்வெளிக்கு செல்லும் கனவுகளுடன் லண்டனில் படித்து வந்த தமது மகள் மர்மமான முறையில் மரணமடைந்தது எப்படி என தெரிவிக்கும் வரை அவரது உடலை வாங்க முடியாது என்று மறுத்து லண்டனில் போராடி வருகிறார் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன். சென்னை அண்ணாநகர் மேற்கு பாலாஜி நகரில் வசித்து வருபவர் தாம்சன். இவர் முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜார்ஜினா லண்டன் லிவர்புல் பல்கலைக் கழகத்தில் ஏரோனாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் படித்து வந்தார். இவரது விண்வெளி பயண ஆர்வத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வியந்து பாராட்டினார். இதுவரை விண்வெளிக்குப் போன கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இந்திய வம்சாவளியினர். ஆனால் இந்தியாவிலேயே பிறந்து அதுவும் தமிழகத்தில் பிறந்து விண்வெளிக்கு எதிர்காலத்தில் பயணிக்கக் கூடிய வாய்ப்புள்ளவராக கருதப்பட்டவர் ஜார்ஜினா. ஆனால் கடந்த 13-ந் தேதி திடீரென லிவர்புல் பல்கலைக் கழகத்தில் இருந்து ஜார்ஜினாவின் தந்தை தாம்சனுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ‘உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறப்பட்டது. இதனால் பதறி அடித்துக் கொண்டு லண்டன் போனார் தாம்சன். ஆனால் அவர் அங்கு போய்ச் சேருவதற்குள் ஜார்ஜினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தமது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவளது மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன எனத் தெரிவிக்க வேண்டும் என்றும் லிவர்புல் பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் போலீசாரிடம் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார் தாம்சன். உண்மையான காரணத்தை தெரிவிக்கும் வரை தமது மகளின் உடலை பெற முடியாது என்று கூறி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடியிருக்கிறார் தாம்சன். இன்று வரை தமது மகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய முடியாமல் தவிப்பில் இருக்கிறார் அவர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக