செவ்வாய், 30 ஜூலை, 2013

கனகா பேட்டி : என் தந்தை என்று கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ் தான் வதந்தியை பரப்பியிருப்பார்

நடிகை கனகா புற்றுயோயால் அவதிப்படுவதாகவும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவருவதாகவும் முதலில் செய்திகள் வந்தன.  இன்று அவர் சிகிச்சைபலனின்றி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.  இந்நிலையுல் நடிகை கனகாவே தான் நலமுடன் இருப்பதாக செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அவர்,  ‘’நான் கேரளாவில் சிகிச்சை பெறவில்லை.  சென்னையில் உள்ள எனது வீட்டில் தான் இருக்கிறேன்.  எனக்கு புற்றுநோய் என்று செய்தி பரவி இருக்கிறது. நல்ல வேளை எய்ட்ஸ் என்று செய்தி பரவாமல் இருந்ததே; அதுவே போதும்.&இந்த வதந்திகளை என் தந்தை எனக்கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான் பரப்பி விடுகிறார்.  இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார்.>இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள  நிலையில் என்னைத்தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள  முடிகிறது.என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டிற்கு எப்படி வருகி றார்.  அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன்.  என் அம்மாவுக்கு அவர் ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்துகொண்டதே இல்லை.எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்துகொண்டதில்லை.  அவர் ஒரு பணப்பேய். 
அவரால் தான் எனக்கு ஆண்களைப் பார்த்தாலே பிடிக்காமலே போய்விட்டது.  அதனால்தான் திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.>எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன்.  நாய், கோழி இவற்றுடன் தான் வசிக்கிறேன்.  மனிதர்களை விட இவை எவ்வளவோ மேல். என் உதவிக்கு  என் தேவைகளை கவனித்துக் கொள்ள என் வேலைக்காரி மட்டுமே உடனிருக்கிறார்.எக்காரணத்தைக்கொண்டும் எனக்கு தந்தை என்று கூறிவரும் தேவதாசை என் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்.  என் அம்மாவுக்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன்.சில நடிகர், நடிகைகளிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேச விரும்பவில்லை.>என் வீட்டு வாசலுக்கு வந்த தேவதாசை நான் துரத்திவிட்டேன்.  அவரை நான் பார்க்க விரும்பவில்லை.  என் இறுதி மூச்சு வரை இதில் நான் உறுதியாக இருப்பேன்.’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக