வியாழன், 25 ஜூலை, 2013

மாயாவதி கட்சியை சேர்ந்த கற்பழிப்பு குற்றவாளிகளை கோர்ட்டில் அடித்து உதைத்த வழக்கறிஞர்கள் !



Meerut gangrape accused assaulted by lawyers in court premises
Meerut:The police on Tuesday arrested Bahujan Samaj Party (BSP) leader, Amit Bhadana, who allegedly raped a Class 12 student along with three accomplices in a moving SUV late on Saturday night.
The accused, including Amit Bhadana, a contractor linked to the Bahujan Samaj Party (BSP), were being taken out of court after a hearing when they faced the fury of the lawyers and some other bystanders. Reports said the lawyers kept saying that the accused should hang.It took several moments for the police to get their act together and rush the accused back to the jail. But the police say none of them were seriously injured.
வழக்கறிஞர்களும் பொதுமக்களும் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் திட்டினர். இத்தகைய கொடுமை செய்த நபர்களை தூக்கில் தொடங்க விட வேண்டும் என்றும் வலியுறுத்தி தாக்கினர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சனிக்கிழமை அன்று பிளஸ் 2 மாணவியை, 4 பேர் கொண்ட ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று, ஓடும் காருக்குள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அந்த நபர்கள், போலீசில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பேஸ்புக் மூலம் அந்த பெண்ணுக்கு பழக்கமான நண்பர் மற்றும் 3 பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த பேஸ்புக் நண்பர் ஷோபித் குர்ஜார், அமித் பாதனா, அவரது கார் டிரைவர் ஆசாத் சிங் குஜ்ஜார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். 4-வது குற்றவாளி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.


கைது செய்யப்பட்ட 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் கோர்ட் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் திட்டினர். இத்தகைய கொடுமை செய்த நபர்களை தூக்கில் தொடங்க விட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஒரு கட்டத்தில் அவர்களை வழக்கறிஞர்கள் கோபத்தில் தாக்கினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார், குற்றவாளிகளை அவசரம் அவசரமாக வெளியே கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றி சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். இதனால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக