செவ்வாய், 30 ஜூலை, 2013

குடிநீரில் சாக்கடை கலப்பு: சென்னையில் சாலை மறியல்

சென்னை மாநகராட்சி 74வது வட்டத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்த வருவதை கண்டித்து அயன்புத்தில் மாதர்-வாலிபர் சங்கங்கள் இணைந்து 30.07.2013 செவ்வாய்க்கிழமை ஓட்டேரி குன்னுர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சுரேஷ், அமாவாசை (சிபிஎம்), மாரியம்மா, குமாரி, பானுமதி (மாதர்சங்கம்), ஏழுமலை, சதீஷ் (வாலிபர்சங்கம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சென்னை அயன்புரம் நம்மாள்வார்பேட்டை, எஸ்.எஸ் புரத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை குடிக்கும் மக்கள் வயிற்றுப்போக்கு, மர்ம காய்ச்சலுக்கு ஆளாகிவருகின்றனர். சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் விநியோகம் செய்யப்படும் குழாய்களில் துர்நாற்றத்துடன் கரிய நிறத்தில் குடிநீர் வருவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். < மெட்ரோ நிர்வாகத்திடம்  பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் செவ்வாயன்று மெட்ரோ அலுவலகத்தை வடசென்னை துணைத்தலைவரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான பா.தேவி தலைமையில்  மறியல் நடைபெற்றது.
இதனால் குன்னுர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததையொட்டி திருவிகநகர் சட்டமன்ற உறுப்பினரும் மெட்ரோ அதிகாரிகள் விரைந்து வந்து சமரசம் செய்யமுயன்றனர். அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்து தரப்படும் என கொடுத்த உத்திரவாதத்தின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக்கொள்ளப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக