செவ்வாய், 23 ஜூலை, 2013

ஹன்சிகாவுக்கு தமிழ்நாட்டில் போயும் போயும் இந்த தலைஎழுத்து

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை:நாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக ? கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ‘ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, ‘என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம், ‘சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று கேட்டபோது மறுத்துவந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்தபோதுகூட ‘சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஹன்சிகா இன்று காலை 6 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. டுவிட்டரில் அவர் கூறும்போது, ‘என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது. அதை நான் சரி செய்ய விரும்புகிறேன். ஆமாம், நான் எஸ்.டி.ஆரை (சிம்பு) காதலிப்பது உண்மைதான். அது எனது தனிப்பட்ட வாழ்க்கை. யாரும் அதுபற்றி பேச வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். கொஞ்சம் விபரமா கோலிவூட் கேர்ல்ஸ்கிட்டே  டீடெயில் கேட்டிருக்கலாமே ? ம்ம் உங்க விதி யாரால திருத்த முடியும் ?


ஹன்சிகாவின் இந்த மெசேஜை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்து போட்டதுடன் அவரும் கருத்து வெளியிட்டிருக்கிறார். ‘ஆமாம், ஹன்சிகாவை காதலிப்பது உண்மைதான். எங்களது இருவீட்டு பெற்றோரும் சந்தித்து பேசி எங்கள் திருமணம் பற்றி முடிவு செய்வார்கள். எங்களது தனிப்பட்ட விருப்பத்துக்கு மதிப்பளித்து யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்..tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக