செவ்வாய், 30 ஜூலை, 2013

முதலமைச்சர் ஜெயலலிதாவை அடுத்தடுத்து குட்டியானை முட்டியதால் நிலைகுலைந்தார்

முதலமைச்சரை முட்டியது குட்டியானை :
அடுத்தடுத்து இரண்டு முறை முட்டியதால்
நிலை குலைந்தார் ஜெயலலிதா

 முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.  இந்நிலையில் இன்று அவர் முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கே அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா.காவேரி என்ற 2 வயது யானைக்கு பழம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் முதல்வர்.  அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை முட்டியது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்தது காவேரி.  இத னால் நிலை குலைந்துபோனார் முதல்வர்.  உடன் இருந்த அதிகாரிகள் முதல்வருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்  கொண்டனர்.
படங்கள் : அருள்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக