சனி, 27 ஜூலை, 2013

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு

காஜியாபாத்: காதலிக்க மறுத்த திருமணமான பெண் மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். விஜய்நகர் பகுதியை சேர்ந்தவர் லக்கான் (30). அதே பகுதியில் வசித்து வரும் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீனா (22). மீனாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் லக்கான் அடிக்கடி மீனாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் மீனா அதற்கு சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வேலைக்கு சென்றிருந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்த லக்கான், மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். மீனா அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த லக்கான், கொலை செய்துவிடுவதாக மீனாவை மிரட்டிவிட்டு சென்றார்.
இந்நிலையில் வீட்டு வேலை செய்து வரும் மீனா, நேற்று காலை ரிபப்ளிக் சொசைட்டி கிராசிங் வழியாக சென்றார். அப்போது மீனாவை வழிமறித்த லக்கான், கையில் பாட்டிலில் வைத்திருந்த ஆசிட்டை மீனா மீது ஊற்றிவிட்டு தப்பியோடினார். அதைக் கண்ட அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீனாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மீனா 50 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.  இதற்கிடையே அங்கு வந்த போலீசார், மீனாவிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தலைம¬றாவகி உள்ள லக்கானை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர் dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக