வியாழன், 18 ஜூலை, 2013

தபுவிடம் கண் கலங்கிய மனிஷா கொய்ராலா

சென்னை:கேன்சர் நோயால் பாதித்த தன்னை நேரில் சந்தித்து ஆறுதல்
சொல்ல தோழி நடிகைகள் யாரும் வரவில்லையே என்று தபுவிடம் கண் கலங்கினார் மனிஷா.‘இந்தியன், ‘மும்பை எக்ஸ்பிரஸ், ‘மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். உடல் ஆரோக்கியத்துடன் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது நட்பு கொண்டாடிய பல நடிகைகள் கேன்சர் என்று தெரிந்தபிறகு அவருடன் பழகுவ தையே நிறுத்திவிட்டார்களாம். ஆனால் நடிகை தபு மட்டும் தனது நட்பை தொடர்ந்தார். மருத்துவமனையிலிருந்தபோது அடிக்கடி அவரிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறி வந்தார்.சமீபத்தில் மனிஷா மும்பை திரும்பினார். ஆனால் யாரும் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கவில்லை. அவரை நேரில் சென்று பார்த்த ஒரே தோழி தபுதான். இது மனிஷாவுக்கு ஆறுதல் அளித்தது. என்ன சாப்பிட வேண்டும், உடலை எப்படி ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று அவருடன் மனம் விட்டு பேசும் தபு, விரைவில் மனிஷாவுடன் டூர் கிளம்பவும் திட்டமிட்டிருக்கிறார். சிக்கிம் செல்ல இருவரும் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக