வெள்ளி, 12 ஜூலை, 2013

ராமஜெயம் கொலையாளிகள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்?

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான ராமஜெயம் படுகொலை வழக்கில் கொலையாளிகள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரங்கள். திருச்சி அருகே கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதி மர்மமான முறையில் ராமஜெயம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரை கடத்தி கொலை செய்த கொலையாளிகள் யார் என்பது குறித்து மர்மமாகவே இருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சிபிசிஐடி போலீசார் ராமஜெயத்தின் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். இலங்கையைச் சேர்ந்த ஒரு பிரமுகருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்த ஒரே துப்பு ராமஜெயம் பயன்படுத்திய செல்போன்கள் மட்டுமே. கொலை செய்யப்படுவதற்கு முன்பு 6 மாதங்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் செல்போன் நம்பர்கள் ராமஜெயத்தின் செல்போன்களில் பதிவாகி உள்ளது. இதில் சில முக்கிய தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதால் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. தற்போது இந்த கொலை வழக்கில் எந்த நேரமும் குற்றவாளிகள் கைது செய்யபடலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக