திங்கள், 8 ஜூலை, 2013

இளவரசன் மரணம்: நீதியரசர் சிங்கார வேலு ஆணையத்துக்கு எதிர்ப்பு ! கலப்பு திருமணத்திற்கு எதிரானவர்

தர்மபுரி: இளவரசன் இறப்பின்
உண்மை நிலையை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான ஆணையத்திற்கு இளவரசனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் காதல், கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளவரசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறத்தில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பிய இளவரசன் உறவினர்கள், இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். இதனி்டையே, இளவரசனின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி சிங்காரவேலுக்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிங்காரவேலு தலைமையில் விசாரணை நடைபெற்றால் நியாயம் கிடைக்காது என்றும் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என்றும் இளவரசனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர் சிங்காரவேலு நீதிபதியாக இருந்த காலத்தில் கலப்பு திருமணத்திற்கு எதிராக நடந்து கொண்டார் என்றும் இவர் மீது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர் என்றும் இளவரசனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக