திங்கள், 29 ஜூலை, 2013

குஜராத் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு குற்றவாளி பாண்டே நீதிமன்றில் சரண்

குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான்
உள்ளிட்ட 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த போது அகமதாபாத் இணை கமிஷனராக இருந்த மூத்த போலீஸ் அதிகாரி பாண்டே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து தலைமறைவான பாண்டேவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அகமதாபாத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் பாண்டே ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை அவரை சி.பி.ஐ. கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதன்படி, 2 மாதமாக தலைமறைவாக இருந்த போலீஸ் அதிகாரி பாண்டே இன்று அகமதாபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டேவை, கோர்ட்டுக்கு ஸ்டிரெச்சரில் கொண்டு வந்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர் மாலைமுரசு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக