ஞாயிறு, 28 ஜூலை, 2013

தீ மிதி பூக்குழியில் விழுந்த பெண் சாவு

ஏழுகிணறு வரத அய்யர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது
மனைவி ஷகிலா (45). இவர் கடந்த 21–ந்தேதி சவுகார்பேட்டையில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டார். வேண்டுதல் காரணமாக ஷகிலா தீ மிதித்தார். அப்போது கால் தடுக்கி பூக் குழியில் விழுந்தார். அவரை சிகிச் சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இதுகுறித்து யானைகவுனி போலீசார் விசாரித்து வருகிறார்கள் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக