வெள்ளி, 26 ஜூலை, 2013

பெண்ணாக மாறிய ஆணுக்கும் ஆணாக மாறிய பெண்ணுக்கும் திருமணம் ! உலகம் பலவிதம் !

இரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது காதலர்களாக விளங்குகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். இதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும் 17 வயது இளைஞன் பெண்ணாக பிறந்தவர். எமரல்ட் எனப் பெயரிடப்பட்டிருந்த இவர், பின்னர் சத்திரசிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இரு வருடங்களுக்கு முன்னர் முதல் தடவையாக சந்தித்த இவ்விருவரும் தற்போது காதலர்களாக உள்ளனர்.கடந்த மாதம்தான் எரினின் மார்பகங்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் ஏனைய அமெரிக்க ஜோடிகளைப் போன்று தற்போது கடற்கரைகளில் நீந்துவதுடன் படகுச்சவாரியிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தனக்கு கம்பீரமான ஆணாக எரின் தெரிகிறார் என்கிறார் கெத்தி. (மேலும் பல படங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக