ஞாயிறு, 14 ஜூலை, 2013

பாவனா வெறுப்பு ! தமிழ் படங்களில் அதிகம் கவர்ச்சி காட்ட சொல்லுறாங்க

சென்னை:அதிகமாக கவர்ச்சி காட்ட சொல்வதால் தமிழ் படங்களில்
நடிப்பதில்லை என்கிறார் பாவனா.ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. அவர் கூறியதாவது:சமீப காலமாக தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடிக்காமல் மலையாளத்தில் மட்டும் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். மலையாளத்தில் நல்ல கதைகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதனால் கன்னட படங்களை ஏற்க முடியவில்லை. கடந்த வாரம் தான் ஹரிஹரன் இயக்கும் ‘எழமதே வரவு‘ ஷூட்டிங் முடித்தேன். தற்போது ‘ஆங்ரி பாடிஸ்‘ என்ற படத்தில் நடிக்கிறேன். வரும் செப்டம்பர் மாதம் வரை இதற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் கன்னட படங்களில் நடிக்க கதை கேட்பதை நிறுத்தவில்லை. புனித் ராஜ்குமார், மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘மைத்ரி‘ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறேன். திக்நாத் நடிக்கும் ‘பவானி‘ என்ற படத்தில் நடிக்க கேட்டார்கள். செப்டம்பர் 10ம் தேதி வரை காத்திருந்தால் நடிப்பேன் என தெரிவித்திருக்கிறேன்.


10 வருடத்துக்கு முன் நடிக்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு கதையில் நடித்துவிட்டு பின்னர் வருந்துவதைவிட நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதால் அதற்காக காத்திருந்து நடிக்கிறேன். சமீப காலங்களில் தமிழ், தெலுங்கு படங்களில் என்னை பார்த்திருக்க முடியாது. அங்கு அதிக கவர்ச்சியாக நடிக்க கேட்கிறார்கள். அப்படி நடிக்க விரும்பாததால் தவிர்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக