திங்கள், 15 ஜூலை, 2013

ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் போட்டியிடமுடியுமா ?

ஐதராபாத்:"சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட ஜாமின் கோரி, கீழ் நீதிமன்றத்திலும், ஆந்திர ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும், இவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், "சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் உள்ளவர்களோ தேர்தலில் போட்டியிட முடியாது' என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஜெகன் மோகனின் அரசியல் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஆட்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கு முன், ஜெகன் மோகன் ரெட்டி, ஜாமினில் வெளிவர வேண்டும். இல்லையெனில், அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்.

முடியாது' என, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பால், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர்களும், அந்தக் கட்சித் தொண்டர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கள் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன், விரைவில் ஜாமினில் வெளியே வராவிட்டால், அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகலாம் என, அஞ்சுகின்றனர்.சிறையில் அடைப்பு:ஆந்திர முன்னாள் காங்., முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவரான இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு, மே, 27ம் தேதி, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, 14 மாதங்களாக, ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொய் வழக்கு:

இதுதொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவர்கள் தர்மன கிருஷ்ணதாஸ், சுசாரிதா மற்றும் ஷோபா நாகி ரெட்டி ஆகியோர் கூறியதாவது:ஆளும் கட்சியினரால், அரசியல் எதிரிகள் மீது, அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக, ஏராளமான பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அரசியலை பரிசுத்தமாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதில், எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேநேரத்தில், அந்த நடவடிக்கைகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையக் கூடாது.அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாகவே, ஜெகன் மோகன் மீது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பொய் வழக்குகளை போட்டு, அவரை சிறையில் அடைத்துள்ளது. இருப்பினும், ஜெகன்மோகன் வெளியே வருவார்; தேர்தலில் போட்டியிடுவார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், ஆந்திர சட்டசபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான, 295ல், 83 எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, சிறிய குற்றங்கள் முதல், கொடூர குற்றங்கள் வரையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில், 54 பேருக்கு எதிராக, கொலை, பாலியல் பலாத்காரம் உட்பட, கடுமையான கிரிமினல்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரிமினல் குற்றச்சாட்டு:

குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்களில், 60 பேருக்கு எதிராக, ஒன்று முதல், மூன்று வழக்குகளும், 17 பேருக்கு எதிராக, நான்கு முதல், ஆறு வழக்குகளும், மூன்று பேருக்கு எதிராக, ஏழு முதல், 10 வழக்குகளும், வேறு, மூன்று பேருக்கு எதிராக, 10க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆந்திராவில், லோக்சபா எம்.பி.,க்கள், 42 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 18 பேர் என, மொத்தம், 60 எம்.பி.,க்கள் உள்ளன. இவர்களில், எட்டு பேருக்கு எதிராக, கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எட்டு பேரில், மூன்று பேர் காங்கிரசையும், இரண்டு பேர், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியையும் சேர்ந்தவர்கள். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக