ஞாயிறு, 14 ஜூலை, 2013

ரவிசங்கர் பிரசாத் பிணமாகக் கண்டெடுப்பு! வசூல் ராஜா, நண்பன் படத் தயாரிப்பாளர்

ஏனாம்: வசூல் ராஜா எம்பிபிஎஸ், நண்பன், மயக்கம் என்ன போன்ற படங்களைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் ரவி சங்கர் பிரசாத் உடல், ஆந்திராவில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மறைந்த எல்வி பிரசாத்தின் பேரனும், ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவன அதிபருமான ரவிசங்கர் பிரசாத் கடந்த நான்கு தினங்களாக மாயமாகிவிட்டதால், அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநில பகுதியான ஏனாமில் உள்ள தனது ஓட்டலை பார்வையிடச் சென்ற அவர் அங்கு அதிகாலை 3 மணிக்கு வாக்கிங் போயிருக்கிறார். பிறகு அவர் ஓட்டலுக்கு திரும்பவில்லை.இதுகுறித்து ஏனாம் போலீசில் புகார் செய்யப்பட்டது.  போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிசங்கர் பிரசாத் கடத்தப்பட்டாரா? அல்லது அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தாரா என்று விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் அவரது உடலை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டெடுத்துள்ளனர் போலீசார். அவர் கொல்லப்பட்டாரா அல்லது இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக