திங்கள், 22 ஜூலை, 2013

Tamil Nadu BJP பந்த்: பொதுசொத்துக்களுக்கு சேதம் ! கடைகள், பஸ் மீது கல்வீச்சு ! நஷ்டம் அறவிடபடும்?

Kanyakumari, Tamil Nadu: Tension prevailed in this district as a bandh called by BJP protesting the attack on one of its state-level functionaries in Kanyakumari in Tamil Nadu witnessed sporadic stone throwing incidents targeting buses.
Police said at least 25 buses were damaged as BJP and other Hindu activists allegedly pelted stones demanding the arrest of the culprits involved in the attack on BJP Tamil Nadu unit state executive council member M R Gandhi on Sunday by a four-member gang
பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பாஜக பந்த்: மதுரையில் மறியல், திண்டுக்கல்லில் கடைகள், பஸ் மீது கல்வீச்சு- இல.கணேசன் கைது போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும், சென்னையில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகம், விஸ்வஹிந்து பரிஷத் அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகம், சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். பாஜக பந்த்: மதுரையில் மறியல், திண்டுக்கல்லில் கடைகள், பஸ் மீது கல்வீச்சு- இல.கணேசன் கைது பாஜகவின் இந்த போராட்டத்திற்கு பாமக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மதுரையில் அண்ணாநகர், ஆரப்பாளையம், காலவாசல், மதுரைக் கல்லுரி உள்ளிட்ட 12 இடங்களில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் அம்மாவட்ட பாஜக தலைவர் திருமலைபாலாஜி தலைமையிலான 200 பேர் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் உள்ள கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது சில கடைகள் மீது கல்வீசப்பட்டது. மேலும் ஒரு பேருந்தின் மீதும் கல்வீசப்பட்டது. இதையடுத்து திறந்திருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பாஜக பந்த்: மதுரையில் மறியல், திண்டுக்கல்லில் கடைகள், பஸ் மீது கல்வீச்சு- இல.கணேசன் கைது சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன், தமிழிசை செளந்திரராஜன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக