புதன், 24 ஜூலை, 2013

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 330 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!

அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் அரசு சீனியர் செகண்டரி பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை அளிக்கப்பட்டது. அதை சாப்பிட்டதை தொடர்ந்து, 150 மாணவிகள், வயிற்று வலியாலும், மயக்க உணர்வாலும் அவதிப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுபோல், ஜிந்த் மாவட்டத்தில் மற்றொரு அரசு பள்ளியில் 100 மாணவர்களும், ஹிசார் மாவட்டம் சிசார் அரசு நடுநிலைப்பள்ளியில் 35 மாணவர்களும், பிரான்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 46 மாணவர்களும் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக