திங்கள், 29 ஜூலை, 2013

கூடங்குளம் அணு உலைக்கு 2 வழக்குகளும் தள்ளுபடி!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடரப்பட்ட 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அம்மனுக்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதி அளித்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த மே ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உட்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் 15 நிபந்தனைகளை நிறைவேற்றாமல், அணுமின் நிலையத்தை இயக்குவதற்கான அனுமதியை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அனுமதியை ரத்து செய்து நிபந்தனைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 23ந் தேதி உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்குகளை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக