வியாழன், 18 ஜூலை, 2013

டெல்லி கற்பழிப்பு மைனர் குற்றவாளி தப்பிவிடுவான் ? வயது உச்சவரம்பை 16 ஆக குறைக்க முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுடெல்லி: சிறார் வயது சிறார் நீதி சட்டத்தின்படி அதிகபட்சமாக அவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும். இதன் காரணமாக சிறார் வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் கொடூர குற்றங்களை புரியும் மைனருக்கான வயது வரம்பையாவது 16 ஆக குறைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் மூலம், கொடூர குற்றங்களை புரியும் சிறுவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க இயலும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டது. இதற்கு சிறுவர் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் மொத்தமாக விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதில், ÔÔசிறாருக்கான வயது வரம்பை நிர்ணயம் செய்யும் சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறினர்.

வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடியாது
என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.டெல்லியில் கடந்த டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீ சார் கைது செய்தனர்.இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும்படி நாடு முழுவதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.. இந்த சம்பவத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டது அந்த சிறுவன்தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் சிறார் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் & 2000&ன்படி. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாக (மைனர்) கருதப்படுகின்றனர். இந்த சட்டத்தின் அடிப்படையில், மாணவி பலாத்காரம் செய்த சிறுவனும் மைனராக கருதப்பட்டு, அவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.இவ்வழக்கில் சிறுவனுக்கு எதிரான விசாரணை முடிந்து 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக