வெள்ளி, 26 ஜூலை, 2013

ஜில்லாவுக்கு பில்ட் அப் ஆரம்பம்! 15 கோடி 18 கோடி 25 கோடி 100 கோடி 1000 கோடி ?

வேந்தர் மூவீஸ் வெளியிடும் தலைவா படத்தை சன் டிவி 15 கோடிகள் கொடுத்து டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது. இதற்கு முன்பாக விஜயின் பல படங்கள் சன் டிவியில் பல கோடிகளுக்கு விலைபோயிருக்கிறது. (வேலாயுதம் தவிர - வேலாயுதம் படம் ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டது).
விஜய் நடித்த தலைவா படம் நிர்ணயித்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரில் தொடங்கிய படத்தை ஆஸ்திரேலியாவில் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.
விஜய் - மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜில்லா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஜில்லா படத்தின் ஷூட்டிங் கூட முடிவடையாத நிலையில் 18 கோடிகள் கொடுத்து அதன் டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது சன் டிவி.

ஜில்லா படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது .இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது படத்தின் ஹைலைட். 

ஆல்ரெடி வசூல் மன்னனாக இருக்கிறார் விஜய். அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோர்க்கிறார். விஜய்யின் உயரம் வானம் போல விரிந்துகொண்டே போகிறது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக