வியாழன், 25 ஜூலை, 2013

12 வருடம் காதலித்தவன் 50 இலட்சம் வரதட்சணை கேட்டான்! ஆசிரியை தற்கொலை

பன்னிரெண்டு வருட காதலன்  திருமணம் செய்ய வரதட்சனை கேட்டதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே  நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது.
முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக