வெள்ளி, 26 ஜூலை, 2013

இலவசமாக போர்வெல் வழங்கும் நடிகர் கஞ்சா கறுப்பு ! இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல்

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தற்போது ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற
படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். ‘அங்காடி தெரு’ மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆருஷி நாயகியாக நடிக்கிறார். ‘மலையன்’ என்ற படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம். இன்னமும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் கஞ்சா கருப்புவுக்கு வந்திருக்கிறதாம். ஆகையால், படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தருகிறேன் என சத்தியம் செய்திருக்கிறாராம் கஞ்சா கருப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக