He is just another hospital compounder, but then again, as this raid reveals Mahesh Chand Sharma is also a billionaire with assets worth more than a whopping Rs. 100 crores. After months of tracking him, the Anti-Corruption Bureau finally caught him red-handed while accepting a bribe of 5 lakh.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வந்தவர் மகேஷ் சந்த் சர்மா. நர்சிங் கவுன்சில் ஆலோசகராகவும் இவர் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல புகார்கள் வந்தன. கடந்த சில மாதங்களாக இவரது நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் நர்சிங் கல்லூரி உரிமையாளரிடமிருந்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது மனைவி பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. இது தவிர 25க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரிகளில் இவர் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. நர்சிங் கல்லூரிகள், மருத்துவமனை, ரிசார்ட், ஜெய்ப்பூரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் சேர்த்துள்ள சொத்தின் மதிப்பு ரூ. 100 கோடியை தாண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை டிஐஜி கோவிந்த் நாராயண் புரோகித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சர்மாவின் சொத்துக்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள கம்பவுண்டர் சர்மாவுக்கு கடந்த 2008ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றியதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் 26 நர்சுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது இந்த விருது வாங்கிய ஒரே ஆண் இவர் தான். அந்த சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டீலிடமிருந்து இவர் விருதை பெற்றுள்ளார். மத்திய அரசின் விருது வாங்கியவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.100 கோடி சொத்து சேர்த்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக