இஸ்லாமாபாத்: சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின் லேடனை, பல ஆண்டுகளுக்கு
முன்னரே பிடித்திருக்கலாம்; ஆனால், பாகிஸ்தான் அதை செய்ய தவறிவிட்டதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில், 2001ம் ஆண்டு,
நியூயார்க்கில், இரட்டை கோபுர உலக வர்த்தக கட்டடம், தீவிரவாத தாக்குதலுக்கு
உள்ளானது. இந்த தாக்குதலுக்கு காரணமான, அல்கொய்தா அமைப்பை சேர்ந்த, ஒசாமா
பின் லேடனை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவனை தேடும்
பணிகளில் ஈடுபட்டது. ஆப்கானிஸ்தான் மலைக் குகைகளில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா போர்
தொடுத்தது. இதனிடையே, பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில், பதுங்கியிருந்த ஒசாமா
பின் லேடனை, அமெரிக்க அதிரடி படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில்
தாக்குதல் நடத்திய பின், ஒசாமா பின் லேடன், தன் குடும்பத்துடன்
பாகிஸ்தானில் தங்கியிருந்ததாகவும், சுதந்திரமாக சுற்றித்திரிந்த அவனை கைது
செய்வதில், பாக்., போலீசார், கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும், தகவல்கள்
வெளியாகியுள்ளன. பாகிஸ்தானை பற்றி தெரியாமல் பேசும் கருத்து இது, ஒசாமா பாகிஸ்தான் பிரதமர்
அலுவலகத்தில் தங்கினால் கூட அவர்கள் ஒசாமாவை பார்க்கவே இல்லையே என்று
சாதித்து இருப்பார்கள். பாகிஸ்தானில் தீவிரவாத ஆதரவு மனநிலை மாறாத வரையில்
இம்மாதிரியான செயல்கள் தொடரும் அது நம் நாட்டிற்கு எப்போதுமே ஆபத்தாகவே
இருக்கும்.
அமெரிக்காவின் உளவுத்துறையின் இந்த தகவல் தற்போது பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில், வெளியாகியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு: கடந்த, 2001ம் ஆண்டு, நடந்த அமெரிக்க தாக்குதலுக்கு பின், உடனடியாக, ஒசாமா பாகிஸ்தான் விரைந்தார். அங்கு தங்கியிருந்த ஒசாமா, மிக சுதந்திரமாக வெளியில் நடமாடினார்.
கடந்த, 2002ம் ஆண்டு, தன் பாதுகாவலர் மற்றும் மனைவியுடன் வெளியில் சென்ற ஒசாமா, தன் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றதால், பாக்., போலீசார் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இருப்பினும், அவர்களை சமாளித்து விட்டு, ஒசாமா அங்கிருந்து சென்றுவிட்டார். பாக்., போலீசார், எச்சரிக்கையுடன் இருந்திருந்தால், ஒசாமாவை, 10 ஆண்டுகளுக்கு முன்பே பிடித்திருக்க முடியும். அமெரிக்காவால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, "ஒசாமா கொல்லப்பட வேண்டும்' என்ற அறிக்கை வெளியாகும் வரையிலும், ஒசாமா பாகிஸ்தானில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிந்தார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக