திங்கள், 29 ஜூலை, 2013

மம்முட்டியிடம் விசாரணை: 10 இலட்சம் இல்லையாம் வெறும் 25 ஆயிரமாம் ? ஓய்ட்டை சொல்கிறார் ப்ளாக் எவ்வளவோ ?

கேரளாவில் சூரிய ஒளி மின் தகடுகள் விற்பனையில் நடந்த மோசடி தொடர்பாக நடிகர் மம்முட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இந்த மோசடியில் காவல்துறை பிடியிலுள்ள பிஜு ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதாநாயரிடம் இருந்து பண ஆதாயம் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இடம் பெற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்ததால் நடிகர் மம்முட்டியை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.​ குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிஜு ராதாகிருஷ்ணன்- சரிதாநாயரின் நிறுவனம் கொச்சியில் நடத்திய ஒரு விழாவில் மம்முட்டிக்கு விருது வழங்கியதோடு ரூ.10 லட்சம் பணமும் கொடுத்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் காவல்துறையில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நடிகர் மம்முட்டியிடம் இதுபற்றி காவல்துறையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.இதனிடையே, தனக்கு ரூ. 10 இலட்சம் தரப்பட்டதாகக் கூறப்படுவதை நடிகர் மம்முட்டி மறுத்துள்ளார். கொச்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு விருதும், ரூ.25 ஆயிரம் பணம் மட்டுமே தரப்பட்டது என்றும் அந்தப் பணத்தை ஒரு அனாதை இல்லத்திற்கு அளித்து விட்டதாகவும் மம்முட்டி தெளிவு படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக