செவ்வாய், 25 ஜூன், 2013

உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் கொள்ளையடித்த பாபா சாமியார்கள் ! stolen jewellery and cash, some of them muddied, amounting to Rs 1.25 crore

ITBP and National Disaster Reponse Force have arrested several babas (religious men) while evacuating them from Kedarnath over the past two days. They were carrying bagfuls of stolen jewellery and cash,  some of them muddied, amounting to Rs 1.25 crore, officials said.
The money will be handed over to the district magistrate by the NDRF and ITBP, a media report said.
“What got us suspicious was that some babas lined up for evacuation had with them stacks of fresh, unused notes. A quick search revealed that the notes were all numbered and probably belonged to a bank,” a rescue personnel said.
“One of the babas had Rs 62,000 in cash hidden in a dholak (drum). Another had a packet of prasad that revealed Rs 10,000 in sequenced notes. One had sewn Rs 1.2 lakh into his clothes,” another rescuer said.
கேதார்நாத் வெள்ளத்தில் சிக்கியோரிடம் கொள்ளையடித்த ‘சாமியார்களே’.. திடுக்கிடும் தகவல்கள்! கேதார்நாத்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் யாத்ரீகர்களிடமிருந்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்தவர்கள் ‘பாபா'க்கள் என்று வணங்கப்படுகிற சாமியார்களே என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனஉத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட இமயமலை சுனாமி என வர்ணிக்கப்படும் பெருவெள்ளத்தில் சிக்கி அம்மாநிலமே உருக்குலைந்து போனது. இதில் குறிப்பாக ஆன்மீக தலமான கேதர்நாத் நகரமே முற்றிலும் நிர்மூலமானது. தற்போது அங்கி எஞ்சி இருப்பது கற்களால் கட்டப்பட்ட கோயில்மட்டும்தான் இந்நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது இத்தகைய படுபாதக கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாபாக்கள் என்று யாத்ரீகர்கள் இறைவனுக்கு சமமாக வணங்கக் கூடிய சாமியார்கள் என்பதை மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இப்படி சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய சாமியார்களிடம் இருந்து சுமார் சேறும் சகதியுமாக நனைந்து போய் இருந்த ரூ1.25 கோடி பணம் கைப்பற்றபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கேதார்நாத்தில் இருந்த ஒரே ஒரு வங்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பணப்பெட்டிகளும் வெள்ளம் வாரிச் சுருட்டியது. கேதார்நாத் கோயிலின் உண்டியலும் பொக்கிஷங்களும் கூட வெள்ளத்தால் திறந்துவிடப்பட்டன.
இந்நிலையில் மீட்புப் பணிக்காக வரிசையில் காத்திருந்த பல சாமியார்களிடம் புது நோட்டுகளும் இதுவரை பயன்படுத்தாத நோட்டுகளும் ஏராளமாக இருந்தன. அவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததில் பல ரூபாய் நோட்டுகள் கேதார்நாத் வங்கிக்குரியது என தெரியவந்தது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர்.
இதேபோல் ஒரு பாபா தன்னுடைய டோலக் எனப்படும் டிரம்மில் ரூ62 ஆயிரம் பணத்தை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். மற்றொருவர் பிரசாத பாக்கெட்டில் ரூ10ஆயிரத்தை பதுக்கி வைத்திருந்தாராம்.. மற்றொரு சாமியார் தம்முடைய துணிகளுக்கு இடையே ரூ1.2 லட்சத்தை பதுக்கி இருந்திருக்கிறார். இன்னும் சில சாமியார்கள் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான நகைகளையும் வளையல்களையும் அணிந்து நடமாடியுள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை அனைத்துமே யாத்ரீகர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவையே என ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.இதில் உச்சகட்ட கொடூரம் என்னவெனில் சில சாமியார்கள் யாத்ரீகர்களின் விரல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்திருக்கின்றனர் என்பதுதான்!
இவர்களை எப்படி வணங்குவது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக