சனி, 15 ஜூன், 2013

புது தில்லு முல்லு நல்ல ஒரு REMIX



இந்தியில் வெளிவந்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு. பாலச்சந்தர் ரீமேக் செய்த தில்லு முல்லு திரைப்படத்தை மறுபடியும் தமிழிலேயே ரீமேக் செய்திருக்கின்றார்கள்.பெரிய நட்சத்திரமாக இருந்த ரஜினி நடித்த தில்லு முல்லு திரைப்படத்தை முழுநீள காமெடி திரைப்படமாக எடுத்திருக்கின்றனர்.எம்.எஸ்.வி, யுவன் ஷங்கர் ராஜா திரையில் ஒன்றாக தோன்றி தில்லு முல்லு டைட்டில் சாங் பாடுவது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சீட்டில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ’அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா என டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கடைசியில் வணக்கம் சொல்லி எண்ட் கார்டு போடுவது வரை படம் பார்ப்பவர்கள் சிரிப்பது உறுதி.
தில்லு முல்லு திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை வைத்துக்கொண்டு படம் சிரிப்பு வெடிகளுடன் நகர்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தில்லு முல்லு திரைப்படத்தை தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு செதுக்கி இருக்கிறார்கள்ஃபுட்பால் போட்டியின் போது தேங்காய் சீனிவசனிடம் ரஜினி சிக்குவது மாதிரி, ஐ.பி.எல் போட்டியின் பார்ட்டியில் சிவா கூத்தடிப்பது செல்ஃபோன் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு சிவா பிரகாஷ் ராஜிடம் சிக்குகிறார். ரஜினி மீசை இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வருவது போல, காண்டேக்ட் லென்ஸ் உதவியுடன் பூனைக்கண் சிவா வருகிறார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக