ஞாயிறு, 9 ஜூன், 2013

Pakistan கற்பழித்ததை சொன்ன மகளைக் கொன்ற தந்தை

பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள பஞ்சாப் மாகாணம், குஜராத் மாவட்டம், நவன் கோட் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சோபியா அமான் என்பவர் லாகூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதே கிராமத்தில் வசித்து வந்த தன்னுடைய தோழியை அவரது தந்தை பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளார்.
இந்த தகாத உறவு பற்றி தனது தாயார், சகோதரன், பாட்டி ஆகியோரிடம் அந்த இளம்பெண் கூறியும் அதை நம்ப அவர்கள் மறுத்து விட்டனர்.
தந்தையின் மூர்க்கத்தனம் அதிகரிக்கவே கடந்த மாதம் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி எனது இன்னொரு தோழியின் வீட்டில் அவள் சில நாட்கள் தங்கியிருந்தாள்.
அவளது இருப்பிடத்தை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட குடும்பத்தினர் கடந்த மாதம் 30-ம் தேதி அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.
ரகசியமான அசிங்க உறவை மகள் அம்பலப்படுத்தி விட்டாளே என்ற ஆத்திரத்தில் அவளது வாயில் விஷத்தை ஊற்றி பெற்ற தந்தையே கொன்று விட்டார். யாருக்கும் தெரியாமல் உடலையும் புதைத்து விட்டனர்.
இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று அந்த ரகசிய கடிதத்தில் சோபியா அமான் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தலைமை நீதிபதி உமர் அதா பண்டியால் இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் விசார ணைக்கு உத்தரவிட்டு, விசாரணை முன்னேற்றம் தொடர்பாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் உயர்நீதி மன்றத்திற்கு 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி குஜராத் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக