வியாழன், 6 ஜூன், 2013

ஸ்பாட் பிக்சிங் புகார்! நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு விரைவில் கைது செய்யப்படலாம்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் சென்னை, கோவை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, சூதாட்ட கும்பலின் தலைவர்கள், தரகர்களை பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பனும் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.
மற்றுமொரு அதிர்ச்சி தகவலை காவல்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு உரிமையாளர்களான ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி உட்பட இருவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளன. ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓனரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா, வெளிநாடு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இதையடுத்து, அவர் தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் இன்று ஒப்படைத்தார். குந்த்ராவிடம் 10 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் சில தரகர்களும் (புக்கிகள்) கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் திரிவேதி, அப்ரூவராக மாறி தனக்கு தெரிந்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தார். அணியின் நிர்வாகிகள் மற்றும் சில உரிமையாளர்கள் குறித்தும் திடுக்கிடும் தகவல்களை கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை டெல்லி போலீசார் நேற்று விசாரணைக்காக அழைத்திருந்தனர். அவருடன் நண்பர் கோயங்கா என்பவரும் சென்றிருந்தார். கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களுக்கும் புக்கிகளுக்கும் உள்ள தொடர்பு, அணியின் உரிமை விவரங்கள், யார், யாரிடம் எவ்வளவு பங்குகள் உள்ளது, அணியில் ஷில்பாவின் பங்கு என்ன, இருவரும் நடத்தி வரும் தொழில்கள் குறித்து போலீசார் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு வரை நடந்ததாக கூறப்படுகிறது.

அப்ரூவராக மாறிய சித்தார்த் திரிவேதி கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடந்துள்ளது. போட்டிகளின்போது ராஜ்குந்த்ராவின் தொழில்முறை பார்ட்னரான கோயங்கா, தன்னை அணுகி, ஆடுகளத்தின் தன்மை மற்றும் அணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என்ற தகவல்களை கேட்டதாக திரிவேதி கூறியுள்ளார். இந்த இடத்தில்தான் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. ஏற்கனவே சென்னை அணியின் கவுரவ உறுப்பினர், சூதாட்ட விவகாரத்தில் ஈடுபட்டதாக கைதான நிலையில் ராஜ்குந்த்ரா மற்றும் கோயங்கா ஆகியோரும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இருவரிடமும் போலீசார் இன்றும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணை முடியும் வரை இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என ராஜ்குந்த்ராவுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதையடுத்து அவர் தனது பாஸ்போர்ட்டை இன்று போலீசாரிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே, விசாரணைக்காக இன்று மீண்டும் ஆஜராகும்போது ராஜ்குந்த்ராவை போலீசார் கைது செய்யக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஐபிஎல் சூதாட்ட விவகாரம் மீண்டும் புயலை கிளப்ப தொடங்கியுள்ளது.

அங்கீத் சவான் இன்று ஆஜர்

ஸ்பாட் பிக்சிங் புகாரில் கைதான ராஜஸ்தான் வீரர்கள் ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீசாந்த், சாண்டிலா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருமணத்துக்காக அங்கீத் சவானுக்கு மட்டும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த அவர், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்தார். ஜாமீன் காலம் முடிவடைவதையடுத்து, சவான் இன்று கோர்ட்டில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறதுdinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக