சனி, 29 ஜூன், 2013

நடிகையர் திலகம் சாவித்ரியின் பேரன் நடிக்கும் தமிழ்படம்

மறைந்த ஜெமினி கணேசன், சாவித்ரி பேரன் அபினய் நடிக்கும் படம்
‘விளம்பரம்'. இதுபற்றி இயக்குனர்
கே.ஏ.சூரியநிதி கூறியது: மனதார காதலிக்கும் ஹீரோ, ஹீரோயின் ஜோடி, விளம்பர படம்
எடுப்பது சம்பந்தமாக மலேசியா செல்கின்றனர். அங்கு தன் பழைய காதலியை ஹீரோ சந்திக்கிறார். அதே சமயம் தன் சிறு வயது தோழியை சந்திக்கிறார் ஹீரோயின். இந்த சந்திப்பால் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. இது காதல் ஜோடியை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் விபரீத விளைவுகளையும் சந்திக்கின்றனர். இந்த பிரச்னையில் இருந்து ஹீரோ, ஹீரோயின் மீள்கின்றனரா என்பதற்கு விடை சொல்கிறது படம்.இதில் ஹீரோயின்களாக ஹைரா, ‘அட்டகத்தி' ஐஸ்வர்யா, தம்பி ராமய்யா, சுமன் ஷெட்டி, சோனா, ரித்திஷ், பத்மினி, சுசிக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஜோசப் ஸ்டாலின் தயாரிக்கிறார். வி.பி.ராமகிருஷ்ணன் இணை தயாரிப்பு செய்கிறார். அப்துல் கலாம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜே.விமல் இசை அமைக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக