ஞாயிறு, 2 ஜூன், 2013

பனிரெண்டுதானே வாங்கினேன். அதனால் இன்னும் நாலு கொடுத்துருங்க?

தமிழ்சினிமாவின் தலையாய ஹீரோ அவர். சமீபத்தில் நஷ்டத்தில் தவித்துக்
கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு தானே முன் வந்து கால்ஷீட் கொடுத்தார். இவரது நல்ல மனசை நாடே போற்றியது. எல்லாம் சரி. படமும் முடியப்போகிறது.
இந்த நேரம் பார்த்து உதவி செய்தவருக்கு அந்த படத்தின் பிசினெஸ் எப்படி போகிறது என்ற தகவல் வந்துவிட்டதாம். ஹீரோவே எதிர்பார்த்திராத அளவில் ‘ஆஸ்கிங் பிரைஸ்’ உள்ளதாம்.
இதையடுத்து தயாரிப்பாளரை அழைத்த ஹீரோ, தனக்கு ஈடாக மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி ஹீரோ ஒருவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு பதினாலு சி வாங்கியிருக்கிறாராம். நான் பனிரெண்டுதானே வாங்கினேன். அதனால் இன்னும் நாலு கொடுத்துருங்க என்றாராம்.
நியாயப்படியே பார்த்தாலும் ரெண்டுதானே கேட்கணும். எதற்கு நாலு என்று அதிர்ந்து போனாராம் தயாரிப்பாளர்.
இருந்தாலும் தனது லாபத்தில்தானே இதெல்லாம் என்று எக்ஸ்ட்ராவை வெட்டியதாக கேள்வி. வெட்டினாலும், கட்டிவிடலாம் என்ற விதத்தில், படத்தை வாங்க அதிரடிப் படைகளே தூது விட்டுக் கொண்டிருப்பதில், தயாரிப்பாளருக்கும் சந்தோஷம்.
ஏங்க… இந்த தயாரிப்பாளரை அடுத்து சந்திக்கப்போவது யாரு? டைரக்டரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக