வியாழன், 20 ஜூன், 2013

ராகுல் தேமுதிகவுக்கு ஆதரவு ? தமிழ்நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்படுத்தப்போகும் ராஜ்யசபா தேர்தல்

ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்கவுள்ள எம்.பி. சீட்கள் போக, மீதமாக உள்ள ஒரு சீட்டுக்கு, தி.மு.க.-வும், தே.மு.தி.க.வும் மோதிக்கொள்ளவுள்ள நிலையில், இரு கட்சியினருமே காங்கிரஸ் கட்சியின் தயவை நாடியுள்ளனர்.
தே.மு.தி.க. சார்பில் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில், டி.ஆர்.பாலு சோனியா காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். காங்கிரஸ் யாருக்கு ஆதரவு தரும் என்ற மர்மம் நீடிக்கிறது.
இந்த நிலையில், டில்லி அரசியல் வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின்படி, தி.மு.க. ஆதரவு கேட்கும் முன்னர், தே.மு.தி.க.வுக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருந்தது என்று தெரிகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே, ராகுல் காந்தியால் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

அத்துடன், தி.மு.க. ஆதரவு கேட்ட பின்னரும், ராகுலின் ஆதரவு தே.மு.தி.க.வுக்கே என்றும் விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், தி.மு.க. நேரடியாக சோனியாவுடன் டீல் பண்ணுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தி.மு.க. தயார் இல்லை என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அப்படியிருந்தும், ராகுலின் விருப்பத்தை ஓவர்ரைட் பண்ணி சோனியா முடிவு எடுப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் திக் திக் மனத்துடன் காத்திருக்கிறது தி.மு.க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக