திங்கள், 24 ஜூன், 2013

மேற்கு வங்கத்தில் எல்லா பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்களா? என்னத்தே சொல்ல வார்ர்ரீங்கோ ?

மேற்கு வங்கத்தில் எல்லா பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்களா?: மம்தா கேள்வி
மேற்கு வங்கத்தில் சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 30942 நடந்து இருப்பதாக தேசிய குற்றப்பதிவு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி அதிகமாக கூறப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 24 பர்க்கானாஸ் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அந்த ஊடகங்களை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சில ஊடகங்கள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு எங்கள் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுக்கின்றன. மேலும் அரசுக்கு எதிராக அவர்கள் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வதால் மேற்கு வங்கத்திற்கு அவர்கள் அவமானத்தை கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு பிரச்சினைகாகவும் என்னை குறைகூறினார்கள். இப்பொழுது அவர்கள் கற்பழிப்பிற்காக என்னை கூட வசை பாடுகிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். இங்குள்ள பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்படுகிறார்களா?.
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக