சென்னையில்
நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட
நலத்திட்ட விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சியாக இது அமையும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நிகழ்ச்சி ரத்தானது ரசிகர்களை மிகவும் அப்செட் ஆக்கியிருக்கிறது.விழா ரத்தானது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.நடிகர் விஜய்க்கு ஜூன் 22ம் தேதி 39வது பிறந்தநாள். பிறந்தநாளுக்கு முன்னதாகவே ஜூன் 8ம் தேதி சென்னையில் ஏழைகளுக்கு 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் இவ்விழாவில் பங்கேற்று 3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், ஏழை மாணவ - மாணவி களுக்கு கல்வி உதவி தொகை, கம்ப்யூட்டர்கள், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பஸ், வேன்களில் சென்னை புறப்பட தயாரானார்கள். விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தன. ரசிகர்கள் விஜய்யின் கட்-அவுட்களையும் அமைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று இவ்விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அகில
இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்து
கூறும்போது, 8-ந்தேதி நடக்கவிருந்த விஜய் 1 கோடி நலத்திட்ட பணிகள்
வழங்கும் விழா ரத்தாகியுள்ளது. எனவே வெளியூர் களில் இருந்து ரசிகர்கள்
யாரும் சென்னை வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
விழா
நடைபெறும் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில்
உள்ளது. போக்கு வரத்து நெரிசல் மிகுந்த அந்த இடத்தில் ரசிகர்கள்
வாகனங்களில் திரண்டு வந்தால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்று போலீசார்
அனுமதி மறுதுள்ளதாக தகவல்.
முதலில்
சிறிய அளவில் நடத்துவதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா, பின்னர் தமிழகம்
முழுவதிலும் இருந்து ரசிகர்கள் திரளும் பெரும் விழாவாக மாறியதால்தான் இந்த
குளறுபடி என்கிறார்கள். தமிழகம் முழுவதிலும் இருந்து பெருவாரியான விஜய்
ரசிகர்கள் திரண்டு வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு குளறுபடிகள்
ஏற்படலாம். சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்று உளவுத்துறை
எச்சரிக்கை விடுத்ததால், பாதுகாப்பு காரணங்கள் கருதி காவல்துறை அனுமதி
மறுத்துள்ளதாகவும் தகவல்.
விழா
நடைபெறும் ஜூன் 8ம் தேதி அன்று அதிமுக தலைமைக்கழகத்தில் அதிமுக செயற்குழு
கூடுகிறது. இதனால் பாதுகாப்பு கொடுப்பதில் குளறுபடி ஏற்படும் என்று
காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் தகவல்.
விழா ரத்து ஆனதற்கு இந்த காரணங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சியின் தலையீடும் முக்கிய காரணம் என்று தகவல் nakkeeran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக