திங்கள், 24 ஜூன், 2013

சித்தார்த்: படிக்கும் போது நான் அழகாக இருப்பதாக எந்த பெண்களும் சொல்லவில்லை.

சித்தார்த் நடித்த “தீயா வேலை செய்யனும் குமாரு” படம் சமீபத்தில்
ரிலீசானது. மேலும் பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் சித்தார்த் அளித்த பேட்டி வருமாறு:- தீயா வேலை செய்யனும் குமாரு படம் ஹிட்டானதால் சந்தோஷத்தில் இருக்கிறேன். முதல் வாரத்திலேயே ரூ.10 கோடி வசூலித்துள்ளது. பத்து வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் இப்போதுதான் ஜெயித்துள்ளேன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ”ஜிகர்தண்டா” படத்தில் தற்போது நடிக்கிறேன். வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்திலும் நான் சொந்தமாக தயாரிக்கும் பட மொன்றிலும் நடிக்க உள்ளேன். தமிழ் ரசிகர் வித்தியாசமான படங்களை ஜெயிக்க வைக்கின்றனர். சூது கவ்வும் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன். சுந்தர் சி. இயக்கத்திலும் மீண்டும் நடிக்க ஆசை உள்ளது. நடிகைகளில் பாய்ஸ் படத்தில் நடித்த ஜெனிலியாவை பிடிக்கும். தமிழ் பேசும் சமந்தாவையும் பிடிக்கும். பழகுவதற்கு சமந்தா இனியவர். படங்கள் இயக்கவும் ஆசை உள்ளது. அதற்கான நேரம் வரும் போது செய்வேன்.


பள்ளி கல்லூரியில் படிக்கும் போது நான் அழகாக இருப்பதாக எந்த பெண்களும் சொல்லவில்லை. பெண்களுக்கு என் முகம் பிடிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. நடிகரான பிறகு எல்லா பெண்களும் நான் அழகாக இருக்கிறேன் என்றனர். திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. மனைவியாக வருபவர் நடிகையா, தொழில் அதிபர் மகளா என்பதும் தெரியாது.

இவ்வாறு சித்தார்த் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக