வெள்ளி, 14 ஜூன், 2013

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு ! தொண்டர்களிடம் வசூலித்து சுதாகரன் திருமண செலவை செய்தாரம் ? மணியன் சாட்சியம்

பெங்களூர் : தமிழக முதலவர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில்
மக்களவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் நேற்று சாட்சியம் அளித்தார். தொண்டர்களிடம் நன்கொடை பெற்று சமையல் ஏற்பாட்டை செய்தேன் என்று ஓ.எஸ்.மணியன் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் இருக்க அவர்க ளது வழக்கறிஞர்கள் கொடுத்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண் டார். பின்னர் சுதாகரன் திருமணத்தில் அலங்கார வளைவுகள் அமைத்தது உள்பட திருமணத்திற்கான செலவுகள் குறித்து மதிப்பீடு செய்தது தொடர்பாக முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி வாசுதேவனிடம் அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார்.


அதை தொடர்ந்து ஓ.எஸ்.மணியன் எம்.பியிடம் திருமண விழாவில் பந்தல் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அப்போது மணியன் கூறியதாவது:
திருமணஅழைப்பிதழ் இருவீட்டார் தரப்பில் இருந்தும் வந்திருந்தது. திருமணத்தில் மொத்தம் 6 பந்தல்கள் அமைக்கப்பட்டு உணவு பறிமாறப்பட்டது. சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது. உணவு தயாரிக்க தேவையான பொருட்களை முன்னாள் எம்எல்ஏ தங்கமுத்து மற்றும் ஆதிராஜாராம் ஆகியோர் ஏற்பாடுசெய்தனர். என் தரப்பில் 2 ஆயிரம் தேங்காய்கள் மட்டுமே சப்ளை செய்தேன்.

 மேலும் சமையல் செய்வதற்காக 4 சமையல் கலைஞர்களை மட்டும் நான் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த செலவுகள் செய்ய கட்சி தொண்டர்களிடம் நன்கொடை வசூல் செய்தோம். கட்சி தொண்டர்கள் 85 ஆயிரம் கொடுத்தனர். இது தொடர்பாக வருமான வரிதுறையிலும் எழுத்து மூலம் எழுதி கொடுத்துள்ளோம் என்றார். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், நீங்கள் பொய் சொல்கிறீர்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக பணம் செலவு செய்வதாக கூறுகிறீர்கள் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த மணியன், நான் சொல்வது உண்மை என்றார். இதையடுத்து மேலும் பல ஆதாரங்கள் திரட்ட கால அவகாசம் வேண்டும் என அரசு வழக்கறிஞர் சார்பில் கேட்கப்பட்டது. இதை யடுத்து வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தா dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக