காங்கிரஸ் எம்.பி நவீன் ஜிண்டாலின் 2 நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கங்களைப் பெற முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண ராவ் உதவியிருப்பது அம்பலமாகியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்த தாசரி நாராயண ராவ், அப்போதைய நிலக்கரித் துறை செயலாளர் குப்தாவிற்கு அனுப்பிய குறிப்பில் ஜிணடாலின் நிறுவனங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டாம் என்று கோரியிருந்ததாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. மாறாக ஜிண்டாலின் நிறுவனங்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்த மத்திய மின்துறை ஆணையம், ஜிண்டால் நிறுவனங்களுக்கு பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜிண்டால் நிறுவனங்களின் தகுதி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்த முயற்சித்த போதெல்லாம் தாசரி நாராயணராவ் அதில் தலையிட்டு தடுத்து வந்ததாகவும் சிபிஐ கூறியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த விசாரணை நடத்தி வரும் சிபிஐ, ஜிண்டால் மற்றும் நாராயணராவ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. எனினும் இவ்வழக்கு தொடர்பாக அவர்கள் இருவரிடமும் சிபிஐ இன்னும் விசாரணை நடத்தவில்லை
வெள்ளி, 21 ஜூன், 2013
நிலகரி ஊழலில் தாசரி நாராயண ராவ் ஜிண்டாலுக்கு உதவியது அம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக