ஞாயிறு, 9 ஜூன், 2013

சினிமா இயக்குனர் சங்க தேர்தல் சென்னையில் நாளை நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு நாளை (9ம் தேதி) 4 இணைச் செயலாளர் பதவிக்கு என்.லிங்குசாமி, பேரரசு, டி.கே.சண்முகசுந்தரம், ஏகாம்பவாணன், செய்யாறு ரவி, வி.ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.கண்ணன், வி.பிரபாகர் ஆகியோருடன் மேலும் 12 பேர் போட்டியிடுகின்றனர். இதுதவிர செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் பொறுப்புக்கும் போட்டி நிலவுகிறது.  வாக்குப் பதிவு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நடக்கிறது. மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மறுநாள் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கின்றன தேர்தல் நடக்கிறது. இதில் படைப்பாளர் அணி சார்பில் விக்ரமன் தலைமையிலான அணியும், நமக்கு நாம் அணி சார்பில் விசு தலைமையிலான அணியும் மோதுகின்றன. ஐகோர்ட் வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், பொருளாளர் பதவிக்கு வி.சேகர், ஏ.டி. எல்லையப்பன், ஜெகதீசன் போட்டியிடுகின்றனர். 2 துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு, ஆர்.அரவிந்த் ராஜ், மங்கை அரிராஜன், ஆரல் தி.மனோகர் போட்டியிடுகிறார்கள். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக