ஞாயிறு, 16 ஜூன், 2013

பாரதிராஜா மீது திட்ட மிட்டு பரப்படும் விஷம பிரச்சாரம் ! மணிவண்ணனின் அசிட் நாக்கு

பாரதிராஜாவின் பேச்சால் மனமுடைந்து மணிவண்ணன் மரணித்து விட்டார் என்பது தான் தபோதைய விஷம பிரசாரம் மணிவண்ணனின் நாக்கு என்பது ஊரறிந்த அசிட் நாக்குதான்
மறைந்த மணிவண்ணன்  ஒரு சிறந்த கதாசிரியர் இயக்குனர் என்ற அளவோடு
நாம் அவரை நினைவு கொள்வதுதான் பண்புக்கு அடையாளம் ,
ஆனால் சில ஊடகங்கள் மிக தவறான ஒரு செய்தியை வேண்டும் என்றே விஷக்காற்று போல் பரப்புகின்றன , அதாவது பாரதிராஜாவின் பேச்சிதான் மணிவண்ணனை கொன்று விட்டதாக பிரசாரம் செய்கிறார்கள் ,
இதனால் மறைந்த மணிவண்ணனின் மரணத்தை போஸ்ட் மோர்டம் செய்ய வேண்டிய நிலைமைக்கு பாரதிராஜாவை தள்ளிவிட்டார்கள்.
பாவம் பாரதிராஜா ! நெஞ்சில் கபடம் இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசிய பேச்சுக்கு இல்லாத காரணம் எல்லாம் கற்பித்து பாரதிராஜாவே ஏதோ மணிவண்ணனை கொன்றுவிட்டதாக கதை பின்னுகிறார்கள்
மணிவண்ணன் தான் எந்தவித காரணமுமே இல்லாமல் வீணாக பாரதிராஜாவை வம்புக்கு இழுத்தார் , அந்த மேடையில் அவர் பாரதிராஜாவை பற்றி அந்த அவதூறு வார்த்தைகளை சொல்லி இருக்க கூடாது ,
எங்கோ இருந்த மணிவண்ணனை வசனகர்த்தாவாக்கி பின்பு உதவி இயக்குனராக்கி பின் நடிகராக்கி எல்லா விதத்திலும் அவருக்கு திரை வாழ்வு கொடுத்த பிதாமகன் பாரதிராஜாவே.
உனக்கு படம் இயக்க தெரியாது என்று பாரதிராஜா சொன்னது மிக சாதரணமான ஒரு  அபிப்பிராயம் , குருகுல வாசம் செய்யும் எந்த சிஷ்யனும் குருவிடம் இருந்து இப்படிப்பட்ட வசனங்களை அல்லது திட்டுக்களை வாங்குவது சகஜம்
ஆனால் நம்ப மணிவண்ணன் சாரோ  அதையே ஒரு  மிக மோசமான கருத்தாக மேடையில் சொல்லி பலமான கைதட்டு வாங்கியது உண்மையில் ஒரு cheap டெக்னிக் சார் ,
அதே போன்று கலைஞரோடு சாவகாசமாக பேசி கொண்டிருக்கும் போது அவர் அன்போடு சுகம் விசாரித்து இருக்கிறார் , அதற்கு மணிவண்ணன் முதுகு தண்டில் சுகவீனம் என்றிருக்கிறார் , கலைஞரும் எனக்கும் உன்னைப்போல முதுகு பிரச்னை தான் என்றிருக்கின்றார்
அதற்கு நம்ப மணிவண்ணன் சார் , உங்களின் பாஸ் book அளவுகூட பணம் என்னிடம் இல்லை , நோயில் மட்டும்தான் நமக்குள் ஒற்றுமை விஷமம் கலந்த வேடிக்கையாக பதிலடி கொடுத்தார்
அதற்கும் கலைஞரோ சிரித்து கொண்டே பண்பாக எதோ சொன்னார்
இந்த சம்பவத்தையும் நம்ப மணிவண்ணன் மேடையில் சொல்லி வழக்கம்போல ஜெயா ஆதரவு தமிழ்தேசிய வாதிகளின் கைதட்டலை பெற்று தான் மட்டும் ஏதோ மகா உத்தமன் போல காட்டினார் ,
பெரியார் கொள்கைகளில் அழுத்தமான பற்று கொண்டவர் போல காட்டி கொள்ளும் மறைந்த மணிவண்ணன் தனது மகன் ரகுவண்ணன் காதலித்து கைவிட்ட பெண் ஸ்டெபி யின் விவகாரத்தை பற்றி என்ன கருத்து சொல்லி இருப்பார் என்று நாம் மீண்டும் சொல்லி காட்ட விரும்பவில்லை
ஊருக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதி என்பது எப்போதும் நிலைக்காது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக