புதன், 5 ஜூன், 2013

பான்மசாலா குட்கா தடை கூடாதாம் BJP வேண்டுகோள் ! கர்நாடகத்தில் காவிகளின் போதை

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு
விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பாஜ முன்வைத்த கோரிக்கையை முதல்வர் சித்தராமய்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார். குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இவற்றுக்கு தடை விதித்தன. கடைசியாக தமிழக அரசும், அதை தொடர்ந்து கர்நாடக அரசும் குட்கா பான்மசாலாவுக்கு தடை விதித்தன. கர்நாடகாவில் பாக்கு விளைச்சல் அதிகம். பாக்கு விவசாயிகளின் நெருக்கடி காரணமாக அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த முந்தைய பாஜ அரசு குட்காவுக்கு தடைவிதிக்காமல் இருந்தது.


மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமய்யா முதல்வர் ஆனதும், குட்கா பான்மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. உலக புகையிலை எதிர்ப்பு தினமான கடந்த 31ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. நேற்று பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு குட்கா மற்றும் பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையில் குட்காவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என பாஜ கோரிக்கை வைத்தது. பாஜவிலிருந்து விலகி தனி கட்சி தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் குட்கா தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் சித்தராமய்யா, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது. குட்காவுக்கு தடை விதிப்பதை தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை. 23 மாநில அரசுகளும் 5 யூனியன் பிரதேசங்களும் குட்காவுக்கு தடைவிதித்துள்ளன.  இதை ரத்து செய்ய முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக