ஞாயிறு, 30 ஜூன், 2013

ALSProduction அம்பிகாபதியை களவாடிய தனுஷின் அம்பிகாபதி

 அம்பிகாபதி பெயரை தனுஷ் படத்துக்கு பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து
சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தை தயாரித்த ஏ.எல்.எஸ். பட நிறுவனம்
சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ‘‘அம்பிகாபதி படத் தலைப்பை ஏ.என்.பி. நிறுவனத்துக்குத்தான் விற்றோம். வட இந்திய நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விற்க வில்லை. எனவே அம்பிகாபதி தலைப்பை பயன்படுத்த கூடாது’’ என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த ALS நிறுவனம் கவிஞர் கண்ணதாசனின் தம்பியான AL ஸ்ரீநிவாசனுக்கு சொந்தமானது , கந்தன் கருணை திருடாதே போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்த மாபெரும் நிறுவனம் ALS Production. மிகவும் தான்தோன்றி தனமாக அவர்களின் ஒரு மாபெரும் வெற்றி படத்தின் தலைப்பை களவாடிய தனுஷ் போன்றோர் தங்களது படங்களுக்கு திருட்டு CD பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?
இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. 27-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணை நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று படம் வெளியாகும் தேதி நிர்ணயிக்கப்பட்டதால், நேற்று காலை முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஏ.எல்.எஸ். பட நிறுவனத்தினரும், ஈராஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தினரும் சமரச உடன்பாடு செய்து கொள்வதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

ஏ.எல்.எஸ் நிறுவனத்திடம் இருந்து ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் அம்பிகாபதி தலைப்பை பயன்படுத்துவதற்கான உரிமையை வாங்கியது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அம்பிகாபதி படத்தலைப்பை பயன்படுத்துவதற்கான தடையும் நீங்கியது. இதனால் குறிப்பிட்ட படி அம்பிகாபதி படம் நேற்று ரிலீஸ் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக