செவ்வாய், 11 ஜூன், 2013

ஸ்வர்ணலட்சுமி ஜூவல்லர்ஸ்: நாங்களும் திவால் ஆகிட்டம்ல ! சொத்து 79 கோடி கடனோ136கோடி கணக்கில முழுங்கிட்டோம்ல


"திவால்' மனு :மோசடி நபர்கள் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரை, கோவை தனிப்படை போலீசார் மும்பை, பெங்களூரு,கோவா உள்ளிட்ட இடங்களில் தேடிவரும் நிலையில், அவர்கள் சார்பில், கடந்த 8ம்தேதி, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், தாங்கள் இருவரும் "திவால்' ஆனதாக அறிவிக்க கோரும் மனுவை, வக்கீல் ஆனந்தன் மூலம் தாக்கல் செய்தனர். இம்மனு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  நடிகை சினேகாவை வைத்து திறப்பு விழா நடத்தி மக்களை கொள்ளை அடித்தார்கள்
நாங்கள் நகைக் கடைகளை திறந்தபோது, மக்களிடம் மிகுந்த வரவேற்பும், விற்பனையும் இருந்தது. இதற்காக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட மூன்று வங்கிகளில் கடனாக, முறையே ரூ.60 கோடி, ரூ.12 கோடி மற்றும் 5 கோடி பெற்றோம். ஜூவல்லரிகளுக்கு தேவையான நகைகள், தங்கக் கட்டிகள் பல்வேறு மொத்த வியாபாரிகளிடம் இருந்து கடனாக வாங்கினோம். எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை. இதனால், மீண்டும் வெளி நபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே நாள் வட்டி, மீட்டர் வட்டி, கந்துவட்டிக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் முடியவில்லை. பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க முடியாமல் உள்ள எங்களுக்கு, கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் சில சொத்துகள் உள்ளன. இவற்றின் மொத்தமதிப்பு 79 கோடி ரூபாய். ஆனால், பலதரப்பில் இருந்தும் வட்டிக்கு வாங்கிய கடனாக 136.65 கோடி ரூபாய் உள்ளது. எங்களுக்கு சொந்தமான சொத்துகளை எடுத்துக் கொண்டாலும், கூடுதலாக 57 கோடி ரூபாய் கடன்தான் மிஞ்சும். கடனில் இருந்து மீளமுடியாத எங்களுக்கு "திவால் ஆனவர்' என்று சான்று வழங்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ராமபார்த்திபன் முன்னிலையில், வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது.< "திவால் சான்று' கிடைக்குமா? மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், "திவால் ஆனவர்' என்ற நிலையை சட்டப்பூர்வமாக பெற முடியுமா, என்பது குறித்து, வக்கீல்கள் கருத்து:ஞானபாரதி, சீனியர் வக்கீல்:மோசடி வழக்குகளுக்கு "ஐ.பி.,' கொடுப்பதும், பெறுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இப்படிப்பார்த்தால், சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மோŒடிகள், நடந்து கொண்டிருக்கும் ஈமு மோசடிகள், பாஸி, பைன் பியூச்சர் நிதிநிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்களும், "ஐ.பி.,' கேட்கலாமே என்ற கேள்வி எழும். மோசடி உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் "ஐ.பி.,' பெறுவது செல்லத்தக்கது அல்ல.
வாங்கிய கடனோ ரூ.136 கோடி. சொத்துக்களை விற்றாலும் கடனை அடைக்க முடியாது என்பதால், "திவால் ஆனவர்கள்' என, எங்களை அறிவிக்க வேண்டும்' என்று, கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செ ய்துள்ளனர், தலைமறைவு மோசடி சகோதரர்கள். கோவை, புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலாஜி, 45. இவரது தம்பி அசோக்குமார், 42. இவரும், அதே குடியிருப்பில் வசிக்கிறார். இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரியகடைவீதி, கிராஸ்கட் ரோட்டில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தி வந்தனர். தொழில் விரிவாக்கத்துக்கென தேசிய வங்கிகளில் 77 கோடி ரூபாயை கடனாக பெற்றனர். மேலும், நகை தயாரிப்பாளர்கள் சிலரிடம் 10, 20, 30 கிலோ என, தங்க ஆபரணங்களை வாங்கி குவித்த சகோதரர்கள், சமீபத்தில் திடீரென "கம்பி' நீட்டிவிட்டனர். கடன்கொடுத்த இரு தேசிய வங்கிகளின் அதிகாரிகளும், நகை தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய், மாநகர போலீசில் புகார் செய்தனர். மோசடி சகோதரர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைத்துள்ள கமிஷனர் விஸ்வநாதன், முழு பின்னணியையும் கண்டறிய உத்தரவிட்டுள்ளார். நகை சேமிப்பு திட்டம் என்ற பெயரில் மாதாந்திர சீட்டு நடத்தி, மூன்றாயிரம் பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தொடர்பாகவும், விசாரணை நடக்கிறது.

லோகநாதன், செயலாளர், கோவை வக்கீல்கள் சங்கம்:கோர்ட் "ஐ.பி.,' உத்தரவு பிறப்பித்தால், கடன் கொடுத்தவர்கள், தொகையை இழப்பர். "ஐ.பி.,' பெற்றவர்கள், சாதாரண குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை இழப்பர். குறிப்பாக, ஓட்டுரிமை, வங்கிகளில் கடன்பெறும் தகுதியை இழப்பார்கள். புதிதாக தொழில் துவங்கி, பதிவு செய்ய இயலாது.< வங்கிகள் வாரி வழங்கியது எப்படி? மோசடி சகோதரர்கள், "லாவண்யா கோல்டு ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிட்' என்ற நிறுவனம் எண் 114, 11வது வீதி, டாடாபாத், கோவை - 12 மற்றும் எண் 20, சாய் பாலாஜி டவர்ஸ், ஒப்பணக்காரவீதி, கோவை - 1 மற்றும் 36, லட்சுமி காம்ப்ளக்ஸ், கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் என்ற முகவரியிலும் செயல்படுவதாக கூறி, கோவை - திருச்சி சாலையில் செயல்படும், எஸ்.பி.ஐ., யின், மத்திய கார்ப்பரேட் குழு, வணிக கிளையில், கடந்த 2012, ஏப்., 17ல், ரூ.60 கோடி கடன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு கடனளிக்க சிலர் தங்களது சொத்து பத்திரங்களை கொடுத்து உத்தரவாதம் அளித்துள்ளனர். இதன் பேரிலும், கடனாளிகள் இருவரது பெயரிலும் இருந்த தங்க நகைகளின் பேரிலும் வங்கி அதிகாரிகள், தாராள கடன் அளித்தாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம், துறைசார்ந்தவிசாரணையும் துவங்கியிருக்கிறது. ஐ.பி., என்பது என்ன? ஐ.பி., என்ற ஈரெழுத்து வழக்குச்சொல், "இன்சால்வென்ஸி பெட்டிஷன்' என்பதாகும். அதாவது, ஒரு நபர் சட்டப்படியான தொழில் செய்து, உண்மையான காரணங்களால் மிகவும் நொடிந்து போய், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில், அதில் இருந்து விடுபட, சட்ட ரீதியான உதவியை நாடலாம்; கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ஐ.பி., (திவால் ஆனவர் அல்லது நொடிந்து போனவர்) என்ற Œõன்று பெறலாம். அவ்வாறான நிலைக்குச் செல்லும் நபரின் உயிருக்கு ஆபத்துநேருமானால், அவர் போலீஸ் பாதுகாப்பு பெறவும் தகுதியானவர் என கூறப்படுகிறது. நடிகைக்கு ரூ.6 லட்சம்! மோசடி சகோதர்கள் கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில், கடந்த மார்ச் மாதத்தில், "ஸ்வர்ணலட்சுமி ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடையை, சினேகமான நடிகையை அழைத்து, ஆடம்பர விழா நடத்தி திறந்தனர். அதற்காக நடிகைக்கு ரூ. 6 லட்சம் வழங்கியுள்ளனர். இந்த ஆடம்பர விழாவை பார்த்து வியந்துபோன, நகை தயாரிப்பாளர்கள் சிலர், "பெரிய ஆளா வருவாங்க போலிருக்கு...' என, நம்பி, தங்க ஆபரணங்களை, கிலோ கணக்கில் கடனாக வாரி வழங்கி, ஏமாந்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது தேவைப்பட்டால், நடிகையும் அழைக்கப்படுவார் என்கின்றனர், தனிப்படை போலீசார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக